திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 571 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
571நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 5
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண் மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே
பதவுரை Show / Hide
பாஞ்ச சன்னியமே!, Paanja Sanniyame! - சங்கே!
ஒரு கடலில், Oru Kadalil - ஒரே கடலில்
உன்னோடு உடனே, Unnodu Udane - உன்னோடு கூடவே
வாழ்வாரை, Vaazhvaarai - வாழப் பிறந்தவர்களான மற்றும் பலரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண், Innaar Inaiyaar Endru Ennuvaar Illai Kaan - ஒரு பதார்த்தமாகவும் மதிப்பாரில்லை காண் (நீ ஒருவன் மாத்திரம்)
மன் ஆகி நின்ற, Man Aagi Nindra - ஸர்வ ஸ்வாமியா யிரா நின்ற
மதுசூதன், Madhusoodhan - கண்ணபிரானுடைய
வாய் அமுதம், Vaai Amudham - திருவாயினமுதத்தை
பல் நாளும், Pal Naalum - பல காலமாக
உண்கின்றாய், Ungindraai - பருகா நின்றாய் (ஆகையால் நீயே பாக்யசாலி)