திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 572 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 6 | போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டு
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய
வாய்த் தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் வலம் புரியே | பதவுரை Show / Hideவலம் புரியே!, Valam Puriye! - வலம்புரிச் சங்கே! போய், Poi - வெகு தூரம் வழி நடந்து போய் தீர்த்தம், Theertham - கங்கை முதலிய தீர்த்தங்களிலே ஆடாதே, Aadaadhe - நீராடுகையாகிற கஷ்டங்கள் பட வேண்டாமல் நின்ற, Nindra - நாரத சாபத்தாலே மரமாய் நின்ற புணர் மருதம், Punar Marutham - இரட்டை மருத மரத்தை சாய்த்து ஈர்த்தான், Saaithu eerthaan - முறித்துத் தள்ளின கண்ணபிரானுடைய கைத்தலத்து ஏறி, Kaithalathu eri - திருக் கைத்தலத்தின் மீதேறி குடிகொண்டு, Kudikondu - குடியாயிருந்து சேய், Sei - மிகத்தூரமாய் தீர்த்தமாய் நின்ற, Theerthamaai Nindra - பாவநமாயிருக்கிற செங்கண் மால் தன்னுடைய, Sengan maal Thanudaiya - புண்டரீகாக்ஷனான அவனுடைய வாய்த் தீர்த்தம், Vaai Theertham - வாயம்ருதத்திலே பாய்ந்து, Paaindhu - குதித்து ஆடவல்லாய், Aadavallaai - நீராடவல்லாய் |