திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 573 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 7 | செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்
செங்கண் கரு மேனி வாசுதேவன் உடைய
அங்கைத் தலமேறி அன்ன வசம் செய்யும்
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே | பதவுரை Show / Hideநாள், Naal - அப்போதலர்ந்த செம் கமலம் மலர் மேல், Sem Kamalam Malar Mel - செந்தாமரைப் பூவில் படிந்து தேன், Then - தேனை நுகரும், Nugarum - பருகுகின்ற அன்னம் போல், Annam Pol - அன்னப் பறவை போன்று செம் கண் கருமேனி வாசு தேவனுடைய, Sem Kan Karumeni Vaasu Dhevanudaiya - சிவந்த திருக் கண்களையும் கறுத்த திருமேனியை யுமுடைய கண்ணபிரானது அம் கைத்தலம் ஏறி, Am Kaithalam eri - அழகிய கைத் தலத்தின் மீதேறி அன்ன வசம் செய்யும், Anna Vasam Seiyum - கண் வளர்கின்ற சங்கு அரையா!, Sangu Araya! - சங்குகளிற் சிறந்த பாஞ்ச ஜந்யமே! உன் செல்வம், Un Selvam - உன்னுடைய செல்வமானது சால, Saala - மிகவும் அழகியது, Azhagiyadhu - சிறந்தது காண் |