| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 575 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 9 | பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம் பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால் சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே | பெரு செல்வம் சங்கே, Peru Selvam Sange - பெரிய செல்வம் படைத்த சங்கமே! பதினாறாம் ஆயிரவர் தேவிமார், Pathinaaraam Aayiravar Devimaar - பதினாறாயிரம் தேவிமார்கள் பார்த்து இருப்ப, Paarthu Iruppa - கண்ண பிரானுடைய வாயமுதத்தை நாம் பருக வேணுமென விரும்பி எதிர்பார்த்திருக்கையில் பொது ஆக உண்பது மாதவன் தன் வாய் அமுதத்தை, Pothu Aaga Unbadhu Madhavan than vaai Amudhathai - பகவத் ஸம்பந்திகளெல்லாரும் பொதுவாக உண்ண வேண்டியதான அவ்வெம்பெருமானது வாயமுதத்தை நீ புக்கு, Nee Pukku - நீ யொருவனே ஆக்ரமித்து மது வாயில் கொண்டால் போல் உண்டக்கால், Madhu Vaayil Kondaal pol Undakkaal - தேனை உண்கிறாப் போல் உண்டால் உன்னோடு சிதையாரோ, Unnodu Sidhaiyaaro - (மற்றபேர்கள்) உன்னோடு விவாதப் பட மாட்டாரோ |