திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 578 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
578நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 2
மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச் சாமத் திண் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல் ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே
பதவுரை Show / Hide
மா முத்தம் நிதி சொரியும், Maa Mutham Nidhi Soriyum - சிறந்த முத்துக்களையும் பொன்களையும் கொண்டு பொழிகிற
மா முகில்காள், Maa Mugilkaal - காள மேகங்களே!
வேங்கடத்து, Vengadathu - திருமலையிலெழுந்தருளியிரா நின்ற
உள் புகுந்து, Ull Pugundhu - உள்ளே புகுந்து
கதுவப்பட்டு, Kadhuvapattu - கவ்வ, அதனால் பாதைப்பட்டு
கங்குல், Kangul - இரவில்
இடை ஏமத்து, Idai emathu - நடு யாமத்திலே
சாமத்தின் நிறம் கொண்ட, Saamathin Niram Konda - நீலநிற முடையனான
தாளாளன், Thaalaalan - எம்பெருமானுடைய
வார்த்தை என்னே, Vaarthai Enne - ஸமாசாரம் ஏதாகிலுமுண்டோ?
காமம் தீ, Kaamam Thee - காமாக்நியானது
ஓர் தென்றலுக்கு, Or Thendralukku - ஒரு தென்றற் காற்றுக்கு
நான் இலக்கு ஆய், Naan Ilakku Aay - நான் இலக்காகி
இங்கு இருப்பேன், Ingu Irupen - இங்கு இருப்பனோ? (இது தகுதியோ?)