திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 579 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
579நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 3
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம் எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால் குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே
பதவுரை Show / Hide
அளியத்த மேகங்காள், Aliyatha Megankaal - அருள் புரியக் கடவ மேகங்களே!
ஒளி, Oli - தேஹத்தின் காந்தியும்
வண்ணம், Vannam - நிறமும்
வளை, Valai - வளைகளும்
சிந்தை, Sindhai - நெஞ்சும்
உறக்கத்தோடு, Urakkathodu - உறக்கமும் ஆகிய இவையெல்லாம்
எளிமையால், Elimaiyal - என்னுடைய தைந்யமே காரணமாக
என்னை இட்டு, Ennai Ittu - என்னை உபேக்ஷித்து விட்டு
ஈடு அழிய, Eedu Azhiya - என் சீர் குலையும்படி
போயின, Poyina - நீங்கப் போய் விட்டன
ஆல், Aal - அந்தோ!
குளிர் அருவி, Kulir Aruvi - குளிர்ந்த அருவிகளை யுடைய
வேங்கடத்து, Vengadathu - திருமலையி லெழுந்தருளி யிருக்கிற
என் கோவிந்தன், En Govindhan - எனது கண்ண பிரானுடைய
குணம், Gunam - திருக் கல்யாண குணங்களை
பாடி, Paadi - வாயாரப் பாடிக் கொண்டு (அந்தப் பாட்டே தாரகமாக)
ஆவி, Aavi - பிராணனை
காத்திருப்பேனே, Kaathiruppene - ரக்ஷித்திருக்க என்னால் முடியுமோ?