திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 582 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
582நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 6
சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள் உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே
பதவுரை Show / Hide
சலம் கொண்டு, Salam Kondu - ஸமுத்ர ஜலத்தை முகந்து கொண்டு
கிளர்ந்து எழுந்த, Kilarndhu Ezhundha - மேற் கிளம்பி விளங்குகின்ற
தண் முகில் காள், Than Mugilkaal - குளிர்ந்த மேகங்களே!
மா வலியை, Maa Valiyai - மஹா பலியிடமிருந்து
நிலம் கொண்டான் வேங்கடத்து, Nilam Kondaan Vengadathu - பூமியை ஸ்வாதீநப் படுத்திக் கொண்டவனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற திருமலையிலே
நிரந்து, Nirandhu - பரவி
ஏறி, Eri - உயர விருந்து
பொழிவீர் காள்!, Pozhiveer kaal! - பொழிகின்ற மேகங்களே!
உலங்கு உண்ட, Ulangu unda - பெருங்கொசுக்கள் புஜித்த
விளங்கனி போல் உள் மெலிய, Vilangani pol ul Meliya - விளாம்பழம் போல நான் உள் மெலியும் படி
புகுந்து, Pugundhu - என்னுள்ளே பிரவேசித்து
என்னை, Ennai - என்னுடைய
நலம் கொண்ட, Nalam Konda - நிறைவுகளை அபஹரித்த
நாரணற்கு, Naaranarku - நாராயணனுக்கு
என் நடலை நோய், En Nadalai noi - எனது கஷ்ட வ்யாதியை
செப்புமின், Seppumin - தெரிவியுங்கள்