திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 583 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
583நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 7
சங்க மா கடல் கடைந்தான் த்ண் முகில்காள் வேங்கடத்துச் செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்கு மேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே
பதவுரை Show / Hide
சங்கம், Sangam - சங்குகளை யுடைத்தாயும் பெருமை வாய்ந்தது
மா, Maa - பெருமை வாய்ந்ததாயுமான
கடல், Kadal - கடலை
கடைந்தான், Kadainthaan - கடைந்தருளின பெருமான் எழுந்தருளி யிருக்கிற
வேங்கடத்து, Vengadathu - திருமலையில் திரிகிற
விண்ணப்பம், Vinnapam - விஜ்ஞாபம் யாதெனில்
கொங்கை மேல், Kongai Mel - எனது முலைகளின் மேல் (பூசப் பட்டுள்ள)
குங்குமத்தின் குழம்பு, Kungumathin Kuzhambu - குங்குமக் குழம்பானது
அழிய, Azhiya - நன்றாக அவிந்து போம்படி
தண் முகில் காள், Than Mugilkaal - குளிர்ந்த மேகங்களே!
செம் கண் மால், Sem kan maal - புண்டரீகாக்ஷனான அவ் வெம்பெருமானுடைய
சே அடி கீழ், Se Adi keezh - செவ்விய திருவடிகளின் கீழ்
அடி வீழ்ச்சி, Adi Veezhchi - அடியேனுடைய
ஒரு நாள், Oru Naal - ஒரு நாளாகிலும்
புகுந்து தங்கும் ஏல், Pugundhu Thangum Yel - அவன் வந்து ஸம்ஸ்லேஷிப்பானாகில் (அப்போது தான்)
என் ஆவி தங்கும், En Aavi Thangum - என் பிராணன் நிலை நிற்கும் என்பதாம்
உரையீரே, Uraiyire - (இவ் விண்ணப்பத்தை அப் பெருமானிடத்துச்) சொல்லுங்கள்