| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 588 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 2 | போர்க் களிறு பொரும் மாலிரும் சோலை யம்பூம் புறவில் தார்க் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன் ஆர்க்கிடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே | போர் களிறு, Por Kaliru - போர் செய்வதையே தொழிலாக வுடைய யானைகள் பொரும், Porum - பொருது விளையாடுமிடமான மாலிருஞ் சோலை, Maalirunjolai - திருமாலிருஞ் சோலை மலையினுடைய அம்பூம் புறவில், Amboom Puravil - மிகவுமழகிய தாழ்வரைகளிலே தார் கொடி முல்லைகளும், Thaar Kodi Mullaigalum - அரும்புகளை யுடைய கொடி முல்லைகளும் தவளம் நகை, Thavalam Nagai - (அழகருடைய) வெளுத்த புன்சிரிப்பை காட்டுகின்ற, Kaatukindra - நினைப்பூட்டா நின்றன (அன்றியும்) கார் கொள், Kaar kol - சினை கொண்ட படாக்கள், Padaakal - படா என்னுங் கொடிகள் நின்று, Nindru - பூத்து நின்று கழறி சிரிக்க, Kazhari Sirikka - ‘எமக்கு நீ தப்பிப் பிழைக்க முடியாது‘ என்று சொல்லிக் கொண்டே சிரிப்பது போல விகஸிக்க தரியேன், Thariyen - (அது கண்டு) தரிக்க மாட்டுகின்றிலேன் தோழீ, Thozhi - எனது உயிர்த் தோழியே! அவன் தார், Avan thaar - (நாம் ஆசைப்பட்ட) அவனுடைய தோள் மாலையானது செய்த, Seidha - உண்டு பண்ணின பூசலை, Poosalai - பரிபவத்தை ஆர்க்கு இடுகோ, Aarku idugo - யாரிடத்து முறையிட்டுக் கொள்வது? |