| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 590 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 4 | பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள் வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள் ஐம் பெரும் பாதகர்காள் அணி மால் இரும் சோலை நின்ற எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே | பைம் பொழில் வாழ், Paim Pozhil Vaazh - பரந்த சோலையில் வாழ்கின்ற குயில்காள், Kuyilkaal - குயில்களே! மயில்காள், Mayilkaal - மயில்களே! ஒண் கருவிளைகாள், On Karuvilaikaal - அழகிய காக்கணம் பூக்களே! வம்பக் களங்கனிகாள், Vamba Kalanganikaal - புதிய களாப்பழங்களே! வண்ணம் நறு பூவை மலர்காள், Vannam Naru Poovai Malarkaal - பரிமளத்தையுமுடைய காயாம் பூக்களே! ஐபெரு பாதகர்காள், Aiperu Paadhakarkaal - (ஆகிய) பஞ்ச மஹா பாதகர்களே! உங்களுக்கு, Ungaluku - உங்களுக்கு அணி மாலிருஞ்சோலை நின்ற எம்பெருமானுடைய நிறம் என் செய்வது, Ani Maalirunjolai Nindra Emperumaanudaiya Niram En Seivadhu - திருமாலிருஞ் சோலையிலுள்ள அழகருடைய திருமேனி நிறமானது எதுக்காக? (அந்த நிறத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டது என்னை ஹிம்ஸிப்பதற்காகவே என்கை) |