| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 591 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 5 | துங்க மலர்ப் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்ற செங்கட் கருமுகிலின் திருவுருப் போல் மலர் மேல் தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் சுனையில் தங்கு செந்தாமரைகாள் எனக்கோர் சரண் சாற்றுமினே | துங்கம் மலர் பொழில் சூழ், Thungam Malar pozhil soozh - ஓங்கின மலர்களை யுடைய சோலைகள் சூழ்ந்த திருமாலிருஞ் சோலை, Thirumaalirunjolai - திருமாலிருஞ்சோலையில் நின்ற, Nindra - நின்ற திருக் கோலமாய் எழுந்தருளியிருக்கிற செம் கண் கருமுகிலின், Sem Kan Karumukilin - செந்தாமரை போன்ற திருக் கண்களையும் காள மேகம் போன்ற வடிவையுமுடைய எம்பெருமானுடைய திருவுருப் போல், Thiruvuru pol - அழகிய வடிவம் போலே மலர் மேல் தொங்கிய வண்டு இனங்காள், Malar Mel Thongiya Vandu Inankaal - மலர் மேல் தங்கி யிருக்கிற வண்டுக் கூட்டங்களே! தொகு, Thogu - நெருங்கி யிருக்கின்ற பூஞ்சுனைகாள், Poonjunaikaal - அழகிய சுனைகளே! சுனையில் தங்கு, Sunaiyil Thangu - அச் சுனைகளில் உள்ள செம் தாமரைகாள், Sem Thaamaraikaal - செந்தாமரை மலர்களே! எனக்கு, Enakku - (உங்கள் யம தூதர்களாக நினைக்கிற) எனக்கு ஓர் சரண் சாற்றுமின், Or Charan Satrumin - ஒரு பற்றுக்கோடு சொல்லுங்கள் |