| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 593 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 7 | இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூராயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் தென்றல் மணம் கமழும் திரு மால் இருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே | தென்றல், Thendral - தென்றல் காற்றானது மணம் கமழும், Manam Kamazhum - மணத்தைக் கொண்டு வீசுகின்ற திரு மாலிருஞ் சோலை தன்னுள், Thiru Maalirunjolai thannul - திருமாலிருஞ்சோலை மலையிலே நின்ற, Nindra - எழுந்தருளி யிருக்கிற பிரான், Piran - ஸ்வாமியான அழகர் இன்று, Indru - இன்றைக்கு வந்து, Vandhu - இவ்விட மெழுந்தருளி இத்தனையும், Ithanaiyum - நூறு தடா நிறைந்த வெண்ணெயையும் அக்கார வடிசிலையும் அமுது செய் திட பெறில், Amuthu seithida peril - அமுது செய்தருளப் பெற்றால் (அவ்வளவுமன்றி) அடியேன் மனத்தே வந்து நேர் படில், Adiyen manathe vandhu ner padil - அடியேனுடைய ஹ்ருதயத்திலே நித்ய வாஸம் பண்ணப் பெற்றால் நான், Naan - அடியேன் ஒன்று, Ondru - ஒரு தடாவுக்கு நூறு ஆயிரம் ஆ கொடுத்து, Nooru Aayiram Aa Koduthu - நூறாயிரம் தடாக்களாக ஸமர்ப்பித்து பின்னும், Pinnum - அதற்கு மேலும் ஆளும் செய்வன், Aalum Seivan - ஸகல வித கைங்கரியங்களும் பண்ணுவேன் |