திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 597 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
597நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 1
கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப் போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான் ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த் தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ
பதவுரை Show / Hide
கார் கோடல் பூங்காள், Kaar Kodal Poonkaal - கறுத்த காந்தள் பூக்களே!
உம்மை, Ummai - உங்களை
போர் கோலம் செய்து, Por kolam seithu - யுத்தத்திற்கு உசிதமாக அலங்கரித்து
எம் மேல், Em Mel - என் மேலே
போர விடுத்தவன், Pora Viduthavan - அனுப்பினவானான
கார் கடல் வண்ணன், Kaar Kadal Vannan - கறுத்த கடல் போன்ற வடிவை யுடையனான கண்ணபிரான்
எங்குற்றான், Engutraan - எங்கே யிருக்கிறான்?
நாம், Naam - (உங்களால் மிகவும் நலிவுபட்ட) நான்
இனி, Ini - இனி மேல்
ஆர்க்கு, Aarkku - யாரிடத்தில் போய்
பூசல் இடுவதோ, Poosal Idhuvatho - முறை யிட்டுக் கொள்வதோ (அறியேன்)
அணி, Ani - அழகிய
துழாய் தார்க்கு, Thuzhaai thaarku - திருத் துழாய் மாலையை ஆசைப்பட்டு
ஓடும் நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ!, Odum Nenjam thannai padaikka vallen Andho! - ஓடுகின்ற நெஞ்சை யுடையவளா யிரா நின்றேனே! ஐயோ!