திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 598 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
598நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 2
மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய் மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையின் மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே
பதவுரை Show / Hide
மேல் தோன்றி பூக்காள், Mel thondri pookaal - உயரப் பூத்திருக்கிற காந்தள் பூக்களே!
மேல் உலகங்களின் மீது போய் மேல் தோன்றும் சோதி, Mel Ulagankalin meedhu poi mel thondrum jothi - மேலுள்ள உலகங்களெல்லாவற்றையுங் கடந்து அவற்றுக்கு மேற்பட்டு விளங்குகின்ற ‘தன்னுடைச் சோதி‘ என்கிற பரம பதத்தில் எழுந்தருளி இருக்கிற
வேதம் முதல்வர், Vedham Mudhalvar - வேத ப்ரதிபாத்யனான பரம புருஷனுடைய
வலம் கையின் மேல் தோன்றும், Valam kaiyin mel thondrum - வலத் திருக் கையிலே விளங்கா நின்ற
ஆழியின் வெம் சுடர் போல், Aazhiyin vem sudar pol - திருவாழி யாழ்வானுடைய வெவ்விய தேஜஸ்ஸு போல
சுடாது, Sudaathu - தஹியாமல்
எம்மை, Emmai - என்னை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து, Maatrolai pattavar kootathu - இந்த பிரக்ருதி மண்டலத்தை விட்டு நீங்கினவர்களுடைய திரளில்
வைத்துக் கொள்கிற்றீரே, Vaithu kolkitreere - கொண்டு சேர்க்கவல்லீர்களோ?