| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 6 | திருப்பல்லாண்டு || 6 | எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு வோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரியுரு ஆகி அரியை அழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே | எந்தை, Endhai - நானும் என் தகப்பனும் இருவர் தந்தை தந்தை தந்தை, Thandhai Thandhai Thandhai - என்று ஒரு மூவர் தம் மூத்தப்பன், Tham Moothappan - அவனுக்குத் தந்தையும் பாட்டனுமாகிய ஏழ் படி கால் தொடங்கி, Ezh Padi Kaal Thodangi - ஏழு தலைமுறைகள் தொடங்கி வந்து, Vandhu - மங்களாசாஸநம் பண்ணத்தக்க ஸமயங்கங்களிலே வந்து வழி வழி, Vazhi Vazhi - முறை முறையாக ஆட்செய்கின்றோம்,Aatcheikinrom - அடிமை செய்கிறோம் திருவோணத் திருவிழவில், Thiruvonath Thiruvizhavil - திருவோணமென்கிற திருநாளிலே அந்தியம் போதில், Andhiyam Pothil - (அஸுரருடைய பலம் வளரும்) அந்திவேளையிலே அரியுருவாகி, Ariyuruvagi - நரஸிம் ஹரூபத்தை உடையவனாய் அரியை , Ariyai - (தன் அடியவனான ப்ரஹ்லாதனுக்கு) சத்துருவான இரணியனை அழித்தவனை, Azhithavannai - உருவழித்தவனுக்கு பந்தனை தீர, Pandhanai Theera - (அவனை ஸம் ஹரித்ததினால் உண்டான) ஆயாஸம் தீரும்படியாக பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதும், Pallaandu Pallaayiraththaandendru Paaduthum - காலதத்வமுள்ள வரையில் மங்களாசாஸநம் செய்வோம் |