| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 600 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 4 | முல்லைப் பிராட்டி நீ யுன் முறுவல்கள் கொண்டு எம்மை அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம் கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே | முல்லைப் பிராட்டி!, Mullai Piratti - அம்மா! முல்லைக் கொடியே! ஆழி நங்காய்!, Aazhi Nangaai - கம்பீரமான இயல்வை யுடையாய்! நீ, Ne - நீ உன் முறுவல்கள் கொண்டு, Un muruvalgal kondu - (எம்பெருமானது முறுவல் போன்ற) உனது விகாஸத்தாலே எம்மை, Emmai - என் விஷயத்திலே அல்லல் விளைவியேல், Allal vilaiviyel - வருத்தத்தை உண்டாக்க வேண்டா உன் அடைக்கலம், Un adaikalam - (இதற்காக) உன்னைச் சரணமடைகிறேன் கொல்லை அரக்கியை, Kollai arakkiyai - வரம்பு கடந்தவளான சூர்ப்பணகையை மூக்கு அரிந்திட்ட, Mooku arindhitta - மூக்கறுத்துத் துரத்தின குமரனார், Kumaranaar - சக்ரவர்த்தி திருமகனாருடைய சொல்லும், Sollum - வார்த்தையே பொய் ஆனால், Poi aanal - பொய்யாய் விட்டால் நான் பிறந்தமையும் பொய் அன்று, Naan pirandhamaiyum poi andru - நான் பெரியாழ்வார் வயிற்றில் பிறந்ததும் பொய்யாகக் கடவதன்றோ |