திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 601 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
601நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 5
பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின் ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே
பதவுரை Show / Hide
பாடும், Paadum - பாடுகின்ற
குயில்காள்!, Kuyilkaal - குயில்களே!
ஈடு, Eedu - (கர்ண கடோரமான) இக் கூசல்
என்ன பாடல்?, Enna paadal? - என்ன பாட்டு
நல் வேங்கடம் நாடர், Nal Vengadam Naadar - விலக்ஷணமான திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடைய பெருமான்
நமக்கு, Namakku - என் விஷயத்திலே
ஒரு வாழ்வு தந்தால், Oru vaazhvu thandhaal - ஒரு வாழ்ச்சியைப் பண்ணிக் கொடுப்பனாகில் (அப்போது)
வந்து பாடுமின், Vandhu paadumin - (நீங்கள் இங்கே) வந்து பாடுங்கள்
ஆடும், Aadum - (ஆநந்தத்தாலே) ஆடுகின்ற
கருளன், Karulan - பெரிய திருவடியை
கொடி உடையார், Kodi udaiyaar - த்வஜமாகக் கொண்டிருக்கிற அப் பெருமான்
அருள் செய்து, Arul seidhu - க்ருபை பண்ணி
வந்து கூடுவர் ஆயிடில், Vandhu kooduvar aayidil - (இங்கே) வந்து சேர்வனாகில்
கூவி, Koovi - (அப்போது உங்களை) வரவழைத்து
நும் பாட்டுக்கள், Num paatukal - உங்களது பாட்டுக்களை
கேட்டுமே, Ketume - கேட்போம்