| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 602 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 6 | கண மா மயில்காள் கண்ணபிரான் திருக் கோலம் போன்று அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்கு அடி வீழ்கின்றேன் பண மாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மண வாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே | கணம், Kanam - கூட்டமாயிருக்கிற மா மயில்காள்!, Maa Mayilkaal - சிறந்த மயில்களே! கண்ணபிரான், Kannapiraan - கண்ணபிரானுடைய திருக்கோலம் போன்று, Thirukkolam pondru - அழகிய வடிவு போன்ற வடிவை யுடையீராய்க் கொண்டு அணி மா நடம் பயின்று, Ani Maa Nadam Payindru - அழகிய சிறந்த நாட்டியத்திலே பழகி ஆடுகின்றீர்க்கு, Aadukindreerku - ஆடுகின்ற உங்களுடைய ஆடி, Aadi - திருவடிகளிலே வீழ்கின்றேன், veezhkindren - ஸேவிக்கின்றேன் (இந்த ஆட்டத்தை நிறுத்துங்கள்) பணம் ஆடு அரவு அணை, Panam aadu aravu anai - படமெடுத்து ஆடுகின்ற திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே பல்பல காலமும், Palpala kaalamum - காலமுள்ளதனையும் பள்ளி கொள், Palli kol - பள்ளி கொண்டருளா நின்ற மணவாளர், Manavaalar - அழகிய மணவாளப் பெருமாள் நம்மை வைத்த பரிசு, Nammai vaitha parisu - எனக்கு உண்டாக்கித்தந்த லக்ஷணம் இது காண்மின், Ithu kaanmin - இப்படி உங்கள் காலிலே விழும்படியான தாயிற்று |