திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 604 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
604நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 8
மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே
பதவுரை Show / Hide
மழையே மழையே!, Mazhaiye mazhaiye! - ஓ மேகமே!
புறம், Puram - மேற் புறத்திலே
ஊற்றும், ootrum - என்னை அணைந்து அந்தஸ் ஸாரமான ஆத்மாவை உருக்கி யழிப்பவராய்
நல் வேங்கடத்துள் நின்ற அழகப் பிரானார் தம்மை, Nal Vengadathul ninra azhaga piranar thammai - விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நிற்குமவரான அழகிய பெருமாளை
மண் பூசி, Man poosi - மண்ணைப் பூசி விட்டு
உள்ளாய் நின்ற மெழுகு ஊற்றினால் போல், Ullaai ninra mezhugu utrinaal pol - உள்ளே யிருக்கும் மெழுகை உருக்கி வெளியில் தள்ளுமா போலே
என் நெஞ்சந்து அகப்பட தழுவ நின்று, En nenjandhu agappada thazhuva ninru - என் நெஞ்சிலே ஸேவை ஸாதிக்கிறபடியே நான் அணைக்கும்படி பண்ணி
என்னை, ennai - என்னை
ததைத்துக் கொண்டு, thadhaithu kondu - அவரோடே நெருக்கி வைத்து (பிறகு)
ஊற்றவும் வல்லையே, ootravum vallaiye - வர்ஷிக்க வல்லையோ?