| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 605 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 9 | கடலே கடலே யுன்னைக் கடைந்து கலக்குறுத்து உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும் உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என் நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே | கடலே கடலே!, Kadale kadale! - ஓ கடலே! உன்னை, Unnai - (தனக்குப் படுக்கை யிடமாக வாய்ந்த) உன்னை கடைந்து, Kadainthu - (மலையை யிட்டுக்) கடைந்து கலக்குறுத்து, Kalakkuruthu - கலக்கி உடலுள் புகுந்து நின்று, Udalul pugundhu ninru - உனது சரீரத்திலே புகுந்திருந்து ஊறல் அறுத்தவற்கு, Ooral aruthavarku - ஸாரமான அமுதத்தை அபஹரித்தவராய் (அவ்வாறாகவே) என்னையும் உடலுள் புகுந்து நின்று, Ennaiyum udalul pugundhu ninru - என் உடலிலும் புகுந்திருந்து ஊறல் அறுக்கின்ற, Ooral arukkinra - என் உயிரை அறுக்குமவரான மாயற்கு, Maayarku - எம்பெருமானுக்கு (விண்ணப்பம் பண்ணும்படி) என் நடலைகள் எல்லாம், En nadalaikal ellam - என் துக்கங்களை யெல்லாம் நாக அணைக்கே, Naaga anaike - அவர் படுக்கையான திருவனந்தாழ்வானிடத்தில் சென்று, Sendru - நீ போய் உரைத்தியே, Uraithiye - சொல்லுவாயா? (சொல்ல வேணும் என்கை) |