| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 606 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 10 | நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என் வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே | என் நல்ல தோழி!, En nalla thozhi - எனது உயிர்த் தோழியே நாக அணைமிசை, Naaga anaimisai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே சயனித்திருக்கிற நம் பரர், Nam parar - நம் பெருமாள் சிறு மானிடவர், Siru maanidavar - க்ஷுத்ர மநுஷ்யரா யிரா நின்றோம் (இப்படிப்பட்ட நாம்) என் செய்வது, En seivadhu - என்ன செய்யலாம்? வில்லி புதுவை விட்டுசித்தர், Villi pudhuvai vittuchithar - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு நிர்ஹகரான பெரியாழ்வார் செல்வர், Selvar - பெருஞ்செல்வம் படைத்தவர் பெரியர், Periyar - எல்லாரினும் மேற்பட்டவர் நாம், Naam - நாமோ வென்றால் தங்கள் தேவரை, Thangal dhevarai - தமக்கு விதேயரா யிருக்கிற அப் பெருமானை வல்ல பரிசு, Valla parisu - தம்மால் கூடின வகைகளாலே வருவிப்பரேல், Varuviparel - அழைப்பராகில் அது காண்டும், Athu kaandum - அப்போது (அவனை) நாம் ஸேவிக்கப் பெறுவோம் |