| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 607 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 1 | தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ யாமுகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர் தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே | ஏந்து இழையீர்!, Endhu izhaeeyir - ஆபரணங்களை யணிந்துள்ள மாதர்களே! யாம் உகக்கும் என் கையில் சங்கமும், Yaam ugakkum en kaiyil sangamum - நான் உகந்து தரித்துக் கொண்டிருக்கிற என் கையில் வளைகள் தாம் உகக்கும் தம் கையில் சங்கம் போலாவோ, Thaam ugakkum tham kaiyil sangam polaavo - தான் உகந்து தரித்துக் கொண்டிருக்கிற தன்கையில் சங்கோடு ஒவ்வாதோ? தீ முகத்து, Thee mukathu - க்ரூரமான முகங்களை யுடைய நாக அணை மேல், Naaga anai mel - திருவனந்தாழ்வானாகிற படுகையின் மேலே சேரும், Serum - பள்ளி கொண்டருளா நின்ற திரு அரங்கர், Thiru arangar - ஸ்ரீரங்கநாதன் முகத்தை, Mukathai - (என்னுடைய) முகத்தை நோக்கார், Nokaar - நோக்குகின்றாரில்லை ஆ!, Aa! - ஐயோ! அம்மனே! அம்மனே!, Ammane! Ammane! - அந்தோ! அந்தோ! |