திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 608 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 2 | எழில் உடைய அம்மனை மீர் என்னரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே | பதவுரை Show / Hideஎழில் உடைய, Ezhil udaiya - அழகை யுடைய அம்மனைமீர், Ammanaimir - தாய்மார்களே! அரங்கத்து, Arangathu - திருவரங்கத்திலெழுந்தருளி யிருக்கிற என் இன் அமுதர், En in Amudhar - என்னுடைய இனிய அமுதம் போன்றவராய் குழல் அழகர், Kuzhal azhagar - அழகிய திருக் குழற் கற்றையை யுடையவராய் வாய் அழகர், Vaay Azhagar - அழகிய திரு வதரத்தை யுடையவராய் கண் அழகர், Kan Azhagar - அழகிய திருக் கண்களை யுடையவராய் கொப்பூழில் எழு கமலம் பூ அழகர், Koppuzhil ezhu kamalam poo Azhagar - திருநாபியி லுண்டான தாமரைப் பூவாலே அழகு பெற்றவராய் எம்மானார், Emmaanaar - எனக்கு ஸ்வாமியான அழகிய மணவாளர் என்னுடைய, Ennudaiya - என்னுடைய கழல் வளையை, kazhal valaiyai - “கழல்வளை“ என்று இடு குறிப் பெயர் பெற்ற கை வளையை தாமும், thaamum - அவர் தாம் கழல் வளையை ஆக்கினர், kazhal valaiyai aakinar - “கழன்றொழிகிறவளை“ என்று காரணப் பெயர் பெற்ற வளையாக ஆக்கினார் |