திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 609 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
609நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 3
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே
பதவுரை Show / Hide
பொங்கு, Pongu - அலை யெறியா நின்றுள்ள
ஓதம், Odham - கடலாலே
சூழ்ந்த, Soozhndha - சூழப்பட்ட
புவனியும், Buvaniyum - இப் பூ மண்டலமும்
விண் உலகும், Vin ulagum - பரம பதமும்
ஆதும் சோராமே, Aathum sorame - சிறிதும் குறைவு படாதபடி
ஆள்கின்ற, Aalkinra - நிர்வஹித்துக் கொண்டு போருகிற
எம் பெருமான், Em perumaan - ஸ்வாமியாய்
செங்கோல் உடைய, Sengol udaiya - செங்கோல் செலுத்த வல்லவராய்
திரு அரங்கம் செல்வனார், Thiru arangam selvanaar - கோயிலிலே பள்ளி கொண்டிருப்பவரான மஹாநுபாவர்
என், En - என்னுடைய
கோல் வளையால், Kol valaiyaal - கை வளையாலே
இடர் தீர்வர் ஆகாதே, Idar theervar aagaadhe - தம் குறைகளெல்லாம் தீர்ந்து நிறைவு பெறுவரன்றோ (அப்படியே என் வளையைக் கொள்ளை கொண்டு அவர் நிறைவு பெற்று போகட்டும் என்றபடி)