| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 610 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 4 | மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார் பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல் இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே | மச்சு, Machu - மேல் தளங்களாலே அணி, Ani - அலங்கரிக்கப் பட்ட மாடம், Maadam - மாடங்களையும் மதிள், Madhil - மதிள்களையுமுடைய அரங்கர், Arangar - திருவரங்கத்திலே எழுந்தருளி யிருப்பவராய் வாமனனார், Vaamananar - (முன்பு) வாமநாவதாரம் செய்தருளினவராய் பச்சைப் பசுந்தேவர், Pachai Pachundhevar - பசுமை தங்கிய தேவரான பெரிய பெருமான் தாம், Thaam - தாம் பண்டு, Pandu - முன்பு (மஹாபலி யிடத்தில்) நீர் ஏற்ற பிச்சை குறை ஆகி, Neer yetra Pichchai Kurai aagi - உதக தாரா பூர்வகமாகப் பெற்ற பிச்சையிலே குறை யுண்டாகி (அக்குறையைத் தீர்ப்பதற்காக) என்னுடைய, Ennudaiya - என்னுடைய பெய் வளை மேல், Pei Valai Mel - (கையில்) இடப்பட்டுள்ள வளை மேல் இச்சை உடையர் ஏல், Ichai Udaiyar el - விருப்பமுடையவராகில் இத் தெருவே, Ith Theruve - இத் தெரு வழியாக போதாரே, Podhaare - எழுந்தருள மாட்டாரோ? |