திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 613 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
613நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 7
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம் திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார் எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே
பதவுரை Show / Hide
திண் ஆர் மதிள் சூழ, Thin Ar Mathil Soozha - (மஹா ப்ரளயத்துக்கும் அழியாதபடி) திண்மை பொருந்திய மதிள்களாலே சூழப்பட்ட
திரு அரங்கம், Thiru Arangam - கோயிலிலே எழுந்தருளியிருக்கிற
செல்வனார், Selvanaar - ச்ரிய யதியான பெருமாள் (ஸ்ரீராமனாய்த் திருவவதரித்த போது)
பெண் ஆக்கை, Pen Aakkai - சீதையென்சிற வொரு பெண்ணின் சரீரத்தில் ஆசைக்குக் கட்டுப்பட்டு
உண்ணாது, Unnaadhu - உண்ணாமலும்
உறங்காது, Urankaadhu - உறங்காமலும் (வருந்தி)
ஒலி கடலை, Oli Kadalai - (திரைக் கிளப்பத்தாலே) கோஷிக்கின்ற கடலை
ஊடு அறுத்து, Oodu Aruthu - இடையறும்படி பண்ணி (அணை கட்டி)
தாம் உற்ற, Thaam Utra - (இப்படி) தாம் அடைந்த
பேது எல்லாம், Pedhu Ellaam - பைத்தியத்தை யெல்லாம்
எண்ணாது, Ennaadhu - மறந்து போய் (இப்போது)
தம்முடைய, Thammudaiya - தம்முடைய
நன்மைகளே, Nanmaikale - பெருமைகளையே
எண்ணுவர்,Ennuvar - எண்ணா நின்றார்