| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 617 | நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 1 | மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின் | மற்று இருந்தீர்கட்கு, Matru Irundirgatku - என்னுடைய துணிவுக்கு மாறுபாடாக இருக்கின்ற உங்களுக்கு அறியல் ஆகா, Ariyal Aaga - அறிய முடியாததாய் மாதவன் என்பது ஓர் அன்பு தன்னை, Madhavan Enbathu Or Anbu Thannai - மாதவன் விஷயமான அபிநிவேசத்தை உற்றிருந்தேனுக்கு, Utrirundhenuku - அடைந்திருக்கிற எனக்கு உரைப்பது எல்லாம், Uraipathu Ellam - நீங்கள் சொல்லுவதெல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை, Oomaiyarodu Sevidar Vaarthai - ஊமையும் செவிடனுங் கூடி வார்த்தை சொல்லிக் கொள்வது போல் வீண் (இப்போது எனக்குச் செய்யத்தக்கது எதுவென்றால்) புறத்து, Purathu - ஸமீப ப்ரதேசத்திலே என்னை, Ennai - என்னை பெற்றிருந்தாளை ஒழிய போய், Petrirunthalai Ozhiya poi - மெய் நொந்து பெற்ற தாயான தேவகியை விட்டொழிந்து பேர்த்து ஒரு தாய் இல், Perthu oru thai il - வேறொரு தாயாகிய யசோதையின் க்ருஹத்திலே வளர்ந்த, Valarndha - வளர்ந்தவனும் மல் பொருந்தாமல் களம் அடைந்த, Mal Porundhaamal kalam adaindha - மல்ல யுத்த பூமியிலே மல்லர்கள் வந்து சேர்வதற்கு முன்னே தான் முற்பாடனாய்ப் போய்ச் சேர்த்திருப்பவனுமான நம்பி, Nambi - கண்ண பிரானுடைய (நகரமாகிய) மதுரை, Mathurai - மதுராபுரி யினுடைய உய்த்திடுமின், Uythidumin - கொண்டு சேர்ந்து விடுங்கள் |