| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 618 | நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 2 | நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில் மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும் ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின் | இனி, Ini - இனி மேல் நாணி, Naani - வெட்கப்பட்டு ஓர் கரும்ம இல்லை, Or Karumam illai - ஒரு பயனுமில்லை (ஏனெனில்) நால் அயலாரும், Naal ayalaarum - ஊரிலுள்ளாரெல்லாரும் அறிந்தொழிந்தார், Arindhozhindhaar - (எனது செய்தியை) அறிந்து கொண்டார்கள் பாணியாது, Paaniyadhu - காலதாமத மின்றி மருந்து செய்து, Marundhu seidhu - வேண்டும் பரிஹாரங்களைச் செய்து என்னை, Ennai - என்னை பண்டு பண்டு ஆக்க உறுதிர் ஆகில், Pandu pandu aaka uruthir aakil - இப்போதைய விரஹாவஸ்தைக்கு முற்பட்டதான ஸம்ச்லேஷ தசைக்கும் முற்பட்டதான பகவத் விஷய வாஸனையையே அறியாத தசையிலிருந்த நிறத்தைப் பெற்றவளாகச் செய்ய நினைப்பீர்களாகில் நீர், Neer - நீங்கள் என்னை, Ennai - என்னை ஆணையால், Aanaiyaal - ஸத்யமாக காக்க வேண்டில் , Kaakka vendil - காப்பாற்ற விரும்புகிறீர்களாகில் என்னை, Ennai - என்னை ஆய்ப்பாடிக்கே, Aaypaadike - திருவாய்ப்பாடியிலே உய்த்திடுமின், Uythidumin - கொண்டு சேர்த்து விடுங்கள் மாணி உரு ஆய் உலகு அளந்த மாயனை காணில், Maani uru aay ulagu alandha maayanai kaanil - (மாவலியினிடத்தில்) வாமகரூபியாய்ச் சென்று (த்ரிவிக்ரமனாகி) உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட பெருமானை ஸேவிக்கப்பெற்றால் தலை மறியும், thalai mariyum - (இந்த நோயானது) தலை மடங்கும் |