| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 619 | நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 3 | தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி போயினாள் என்னும் சொல்லு வந்த பின்னைப் பழி காப்பரிது மாயவன் வந்து உருக்காட்டுகின்றான் கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற நந்த கோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின் | தந்தையும், Thandhaiyum - தகப்பனாரும் தாயும், Thaayum - தாய்மாரும் உற்றாரும், Utraarum - மற்றுமுள்ள உறவினரும் நிற்க, Nirka - இருக்கும் போது தனி வழி, Thani vazhi - (இவள்) தான் தோன்றியாகத் தெருவிலே புறப்பட்டாள் என்கிற வார்த்தையானது வந்த பின்னை, Vandha pinnai - உலகில் பரவின பிறகு பழிகாப்பு அரிது, Pazhikaapu aridhu - அப் பழியைத் தடுப்பது முடியாது (நான் தனி வழி போகாதிருக்கவும் முடியவில்லை ஏனென்றால்) நந்த கோபாலன், Nandha Gopalan - நந்த கோபருடைய கடைத் தலைக்கே, Kadai thalaikke - திரு மாளிகை வாசலிலே மாயவன், Maayavan - ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையனான கண்ண பிரான் வந்து, Vandhu - எதிரே வந்து உரு காட்டுகின்றான், Uru kaatukinraan - தன் வடிவைக் காட்டி இழுக்கின்றானே (இப்போது நீங்கள் செய்ய வேண்டிய தென்ன வென்றால்) கொந்தளம் ஆக்கி பரக்கழித்து குறும்பு செய்வான் ஓர் மகனை பெற்ற, Kondhalam aaki parakazhithu kurumbu seivaan or maganai petra - (பெண்களைக்) குடிகெடுத்துக் குறும்பு செய்யும் பிள்ளையைப் பெற்றவனான நள்ளிருட் கண், Nallirut kan - நடு நிசியிலே என்னை உய்த்திடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள் |