| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 620 | நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 4 | அங்கைத் தலத்திடை யாழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்துச் சிறு மானிடவரைக் காணில் நாணும் கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின் | அம் கைத்தலத்திடை, Am kaithalathidai - அழகிய திருக்கைத் தலத்திலே ஆழி கொண்டானவன், Aazhi kondaanavan - திரு வாழியை ஏந்தி யிருப்பவனான பிரானுடைய முகத்து அன்றி விழியேன் என்று, Mugathu andri vizhiyen endru - முகத்தில் தவிர (மற்ற பேருடைய முகத்தில்) விழிக்க மாட்டேனென்று செம் கச்சு ஆடை கொண்டு, Sem kachu aadai kondu - நல்ல கஞ்சுகமாகிற ஆடையினாலே கண் ஆர்த்து, Kan aarthu - கண்களை மூடிக் கொண்டு சிறு மானிட வரை காணில் நானும், Siru maanida varai kaanil naanum - க்ஷுத்ர மநுஷ்யர்களைக் கண்டால் வெட்கப்படா நின்ற கொங்கைத் தலம் இவை, Kongai thalam ivai - இக் கொங்கைகளை நோக்கி காணீர், Nokki kaaneer - (தாய்மார்களே!) நீங்கள் உற்று நோக்குங்கள் (இக் கொங்கைகளானவை) கோவிந்தனுக்கு அல்லால், Govindhanuku allaal - கண்ண பிரானைத் தவிர்த்து வாயில் போகா, Vaayil pogaa - மற்றொருவடைய வீட்டு வாசலை நோக்க மாட்டா (ஆகையாலே) இங்குத்தை வாழ்வை ஒழிய போய், Inguthai vaazhvai ozhiya poi - நான் இவ்விடத்திலே வாழ்வதை யொழித்து என்னை எமுனை கரைக்கு உய்த்திடுமின், Ennai Yamunai karaiku uythidumin - என்னை யமுநா நதிக் கரையிலே கொண்டு போட்டு விடுங்கள் |