| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 621 | நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 5 | ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது அம்மனைமீர் துழிதிப் படாதே கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும் நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின் | அம்மனைமீர், Ammanaimir - தாய்மார்களே! என், En - என்னுடைய இது நோய், Idhu noi - இந்த வியாதியானது ஆர்க்கும், Aarkum - எப்படிப்பட்ட ஞானிகளுக்கும் அறியல் ஆகாது, Ariyal aagadhu - அறிய முடியாது (ஆனால்) துழதிப்படாதே, Thuzathipadaathe - (இது அப்படிப்பட்ட நோயா! என்று) நீங்கள் துக்கப்படாமல் நீர் கரை நின்ற, Neer karai nindra - காளிங்க மடுவின் கரையிலிருந்த கடம்பை ஏறி, Kadampai eri - கடம்ப மரத்தின் மேல் ஏறி (அங்கிருந்து) காளியன் உச்சியில், Kaaliyan uchchiyil - காளிய நாகத்தின் படத்தின் மேலே நட்டம் பாய்ந்து, Nattam paainthu - ஒரு நர்த்தன வகையாகப் பாய்ந்து போர் களம் ஆக, Por kalam aaga - அப்பொய்கை தானே யுத்தக் களமாம்படியாக நிருத்தம் செய்த, Niruththam seydha - நர்த்தனம் செய்யப் பெற்ற பொய்கை கரைக்கு, Poigai karaikku - மடுவின் கரையிலே என்னை உய்த்திடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ப் போடுங்கள் கார் கடல் வண்ணன் என்பான் ஒருவன், Kaar kadal vannan enbaan oruvan - நீலக் கடல் போன்ற திரு நிறத்தனான கண்ணபிரான் தடவ, Thadava - (தனது திருக் கைகளால் என்னைத்) தடவுவானாகில் தீரும், theerum - (இந் நோய்) தீர்ந்து விடும் கை கண்ட யோகம், Kai kanda yogam - (இது தான்) கை மேலே பலிக்கக் கூடிய உபாயம் |