| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 622 | நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 6 | கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும் ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் | கார், Kaar - வர்ஷா காலத்தி லுண்டான தண், Than - குளிர்ந்த முகிலும், Mukilum - மேகமும் கருவிளையும், Karuvilaiyum - கருவிளைப் பூவும் காயா மலரும், Kaayaa malarum - காயம் பூவும் கமலம் பூவும், Kamalam poovum - தாமரைப் பூவுமாகிற இவைகள் வந்திட்டு, Vanditu - எதிரே வந்து நின்று இருடீகேசன் பக்கல் போகு என்று என்னை ஈர்த்திடுகின்றன, Irudeekesan pakkal poku endru ennai eerthidukirana - “கண்ணபிரான் பக்கலில் நீயும்போ“ என்று என்னை வலிக்கின்றன (ஆகையாலே) வேர்த்து, Verthu - பசுமேயக்கிற ச்ரமத்தாலே வேர்வை யடைந்து பசித்து, Pasithu - பசியினால் வருந்தி வயிறு அசைந்து, Vayiru asaindhu - வயிறு தளர்ந்து வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று, Vendu adisil unnum podhu eethu endru - வேண்டிய ப்ரஸாதம் உண்ண வேண்டிய காலம் இது என்று பார்த்திருந்து, Parthirundhu - (ரிஷி பத்னிகளின் வரவை) எதிர்பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும், Nedu nokku kollum - நெடுங்காலம் கடாக்ஷித்துக் கொண்டிருக்குமிடமான பத்தவிலோசனத்து, Pathavilosanathu - பக்தவிலோச்நமென்கிற ஸ்தானத்திலே உய்த்திடுமின், Uythidumin - (என்னைக்) கொண்டு சேர்த்து விடுங்கள் |