Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 623 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
623நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 7
வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணல உறாமையும் உள் மெலிவும் ஓத வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும் பிலம்பன் தன்னை
பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்
வண்ணம் திரிவும், Vannam thirivum - (என்னுடைய) மேனி நிறத்தின் மாறுபாடும்
மனம் குழைவும், Manam kuzhaivum - மனத் தளர்ச்சியும்
உண்ணல் உறாமையும், Unnal uraamaiyum - ஆஹாரம் வேண்டியிராமையுமும்
உள் மெலிவும், Ul melivum - அறிவு சுருங்கிப் போனதுமாகிய இவை யெல்லாம் (எப்போது தணியுமென்றால்)
ஓதம் நீர் வண்ணன் என்பான் ஒருவன், Odham neer vannan enbaan oruvan - கடல் வண்ண னென்று ப்ரஸித்தனாய் விலக்ஷணனான கண்ண பிரானுடைய
தண் அம்துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட, Than amthuzhai enum maalai kondu soota - குளிர்ந்து அழகிய திருத்துழாய் மாலையைக் கொண்டு வந்து சூட்டுமளவில்
தணியும், Thaniyum - நீங்கும் (அத்திருத்துழாய் மாலை உங்களால் இங்கே கொண்டு வந்து கொடுக்க முடியாதாகில்)
மானம் இலாமையும், Maanam ilaamaiyum - மானம் கெட்டுப் போனபடியும்
வாய் வெளுப்பும், Vaai veluppum - வாய் வெளுத்துப் போனபடியும்
பலதேவன், Paladhevan - பலராமன்
பிலம்பன் தன்னை, Pilamban thanai - ப்ரலம்பாஸுரனை
பண் அழிய, pan azhiya - ஸந்தி பந்தங்கள் உருக் குலையும்படி
வென்ற, Vendra - கொன்று முடித்த இடமாகிய
பாண்டீரமென்னும், paandiramenum - பாண்டி வடத்து ஆலமரத்தினருகில்
என்னை உய்த்துடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ச் சேர்த்திடுங்கள்