| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 624 | நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 8 | கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான் பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின் | கன்று இனம், Kanru inam - கன்றுகளின் திரள்கைள மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான், Meykkalum meykka petran - மேய்ப்பதையே தொழிலாகப் பெற்றவனுமானான காடு வாழ் சாதியும் ஆக பெற்றான், Kaadu vaazh saathiyum aaga petran - (வீட்டை விட்டுக் கழிந்து) காட்டிலேயே தங்கி வாழும்படியான சாதியிலும் பிறக்கப் பெற்றான் பற்றி, patri - வெண்ணெய் களவில் பிடிபட்டு உரலிடை, Uralidai - உரலிலே ஆப்பும் உண்டான், aapum undaan - கட்டுப்படவும் பெற்றான் (ஸௌலப்ய காஷ்டையான இச் செயல்கள்) பாலிகாள், Paalikaal - குணத்தையும் குற்றமாகக் கொள்ளும் பாவிகளே! உங்களுக்கு, Ungalukku - உங்களுக்கு ஏச்சுக் கொலோ, echchu kolo - தூஷணத்துக்கோ உடலாயிற்று? (இதுவரையில் நீங்கள் இழிவாகச் சொன்னவை நிற்க இனியாகிலும்) கற்றன பேசி வசவு உணாதே, Katrana pesi vasavu unaadhe - நீங்கள் கற்ற கல்விகளைப் பேசி (என்னிடத்தில்) வசவு கேட்டுக் கொள்ளாமல் காலிகள் உய்ய மழை தடுத்து, Kaaligal uyya mazhai thaduthu - பசுக்கள் பிழைக்கும்படி பெரு மழையைத் தடை செய்து கொற்றம் குடை ஆக, Kotram kudai aaga - வெற்றிக் குடையாக ஏந்தி நின்ற, endhi nindra - (கண்ண பிரனால்) தரிக்கப்பட்ட கோவர்தனத்து, Govardhanathu - கோவர்த்தன மலையினருகே என்னை உய்த்திடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள் |