| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 625 | நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 9 | கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும் நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நமனை இழந்து தலையிடாதே சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின் | கிளி, kili - (நான் வளர்த்த) கிளியானது கூட்டில் இருந்து, kootil irundhu - கூட்டில் இருந்து கொண்டு எப்போதும், epodhum6 - ஸதா காலமும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும், Govindhaa govindhaa endru azhaikkum - கோவிந்தா கோவிந்தா வென்று கூவா நின்றது ஊட்டு கொடாது, Ootu kodaadhu - உணவு கெடாமல் (பட்டினி கிடக்கும்படி) செறுப்பன் ஆகில், Serupan aagil - துன்பப் படுத்தினேனாகில் உலகு அளந்தான் என்று, Ulagu alandhaan endru - உலகளந்த பெருமானே! என்று உயர கூவும், Uyara koovum - உரக்கக் கூவா நின்றது! (இந்தத் திருநாமங்கள் என் காதில் விழும் போதே என் சரீரம் புறப்படக் கிளம்புகின்றது ஆகையால்) நாட்டில், Naatil - இவ் வுலகில் தலை பழி எய்தி, Thalai pazhi eythi - பெருத்த அபவாதத்தை ஸம்பாதித்து உங்கள் நன்மை இழந்து, Ungal nanmai izhandhu - உங்களுடைய நல்ல பேரைக் கெடுத்துக் கொண்டு தலை இடாதே, Thalai idaathe - (பிறகு ஒருவரையும் முகம் நோக்க மாட்டாமல்) தலை கவிழ்ந்து நிற்க வேண்டாதபடி சூடு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும், Soodu uyar maadangal soozhndhu thondrum - தலை யுயர்ந்த மாடங்களால் சூழப்பட்டு விளங்குகின்ற துவராபதிக்கு, Thuvarapadhikku - த்வாரகையிலே என்னை உய்த்திடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள் |