திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 627 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
627நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 1
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை புண்ணில் புளிப் பெய்தால் போலப் புறநின்று அழகு பேசாதே பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே
பதவுரை Show / Hide
கண்ணன் என்னும், Kannan enum - ஸ்ரீக்ருஷ்ணனென்கிற
கரு தெய்வம், Karu dheivam - கரியதொரு பரதேவதையினுடைய
காட்சி, Kaatchi - காட்சியிலே
பழகி கிடப்பேனே, Pazhagi kidapene - பழகிக் கிடக்கிற என்னைக் குறித்து (ஓ! தாய்மார்களே! நீங்கள்)
புறம் நின்று, Puram nindru - அசலாக இருந்து கொண்டு
புண்ணில் புளி பெய்தால் போல, Punnil puli peidhal pol - புண்ணிலே புளி ரஸத்தைச் சொரிந்தாற்போல்
அழகுபேசாதே, Azhagu pesadhe - பணிக்கை சொல்வதைத் தவிர்ந்து,
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில், Pennin varutham ariyaadha Perumaan araiyil - பெண் பிறந்தாருடைய வருத்தத்தை அறியாதவனான கண்ணபெருமானுடைய திருவரையில் சாத்திய
பீதக வண்ணம் ஆடை கொண்டு, Peedhaga vannam aadai kondu - பீதாம்பரத்தைக் கொண்டுவந்து
வாட்டம் தணிய, Vaatam thaniya - (என்னுடைய) விரஹ தாபம் தீரும்படி
என்னை வீசீரே, Ennai veeseere - என்மேல் வீசுங்கள்