திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 628 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
628நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 2
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை வேலால் துன்பம் பெய்தால் போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே கோலால் நிரை மேய்ந்தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி நீலார் தண்ணம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே
பதவுரை Show / Hide
பால் ஆலிலையில், Paal aalilaiyil - பால் பாயும் பருவத்தை யுடைய ஆலந்தளிரிலே
துயில் கொண்ட, Thuyil konda - கண் வளர்ந்தருளின
பரமன், Paraman - பெருமானுடைய
வலை, Valai - வலையிலே
பட்டிருந்தேனை, Patirundhenai - அகப்பட்டுக் கொண்டிருக்கிற என்னைக் குறித்து
வேலால் துன்னம் பெய்தால் போல், Velaal thunnam peydhal pol - வேலாயுதத்தை யிட்டுத் துளைத்தாற்போல் (கொடுமையாக)
வேண்டிற்று எல்லாம் பேசாதே, Venditru elam pesadhe - உங்களுக்குத் தோன்றின படி யெல்லாம் சொல்வதைத் தவிர்ந்து
ஆயன் ஆய், Aayan aay - இடைப் பிள்ளையாய்
கோலால், Kolaal - (இடைச் சாதிக்கு உரிய) கோலைக் கொண்டு
நிரை மேய்த்து, Nirai meithu - பசுக் கூட்டங்களை மேய்த்தவனாய்
குடந்தை கிடந்த, Kudandhai kidandha - திருக் குடந்தையில் திருக் கண்வளர்ந்தருளுமவனாய்
குடம் ஆடி, Kudam aadi - குடக் கூடத்தாடினவனுமான கண்ணபிரானுடைய
நீல்ஆர் தண்அம் துழாய் கொண்டு, Neelaar thanam thuzhaai kondu - பசுமை பொருந்திக் குளிர்ந்து அழகிய திருத் துழாயைக் கொண்டு வந்து
நெறி மென், Neri men - நெறிப்புக் கொண்டதாயும் மிருதுவாயு மிருந்துள்ள
என் குழல்மேல், En kuzhalmel - என் கூந்தலிலே
சூட்டீர், Chooteer - சூட்டுங்கள்