திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 629 | நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 3 | கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால்
நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே | பதவுரை Show / Hideகஞ்சை, Kanjai - கம்ஸனை காய்ந்த, Kaayndha - தொலைத்தவனாயும் கரு வில்லி, Karu villi - பெரியவில் போன்ற புருவத்தை யுடைனாயு மிருக்கிற கண்ண பிரானுடைய கடைக்கண் என்னும், Kadaikkan enum - கடைக் கண்ணாகிற சிறை கோலால், Sirai kolaal - சிறகையுடைய அம்பாலே நெஞ்சு ஊடுருவ, Nenju ooduruva - நெஞ்சமுழுதும் வேவுண்டு, Vevundu - வெந்து போம்படியாகப் பெற்று நிலையும் தளர்ந்து, Nilaiyum thalarndhu - நிலைமை குலைந்து நைவேனை, Naivenai - வருந்துகின்ற என்னை நோக்கி அஞசேல் என்னானவன் ஒருவன், Anjel enaanavan oruvan - “பயப்படாதே“ என்றொரு வார்த்தையும் சொல்லாதவனாய் விஜாதீயனான அவன், Avan - அப்பெருமான் மார்வு அணிந்த, Maarvu anindha - (தனது) திருமார்பில் சாத்தி யருளின வன மாலை, Vana maalai - வன மாலையை வஞ்சியாதே, Vanjiyaadhe - மோசம் பண்ணாமல் தரும் ஆகில், Tharum aagil - கொடுத்தருள்வனாகில் கொணர்ந்து, Konarndhu - (அம் மாலையைக்) கொண்டு வந்து மார்வில், Maarvil - (என்னுடைய) மார்பிலே புரட்டீர், purateer - (நெஞ்சினுள் வெப்பம் தீருமாறு) புரட்டுங்கள் |