திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 630 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
630நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 4
ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும் காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே
பதவுரை Show / Hide
ஆயர்பாடி, Aayarpaadi - திருவாய்ப்பாடி முழுவதையும்
கவர்ந்து உண்ணும், Kavarnthu unnum - கொள்ளை கொண்டு அநுபவிக்கிற
கார் ஏறு, Kaar yeru - ஒரு கறுத்த காளை போன்ற கண்ணன்
உழக்க, Uzhakka - ஹிம்ஸிக்க
உழக்குண்டு, Uzhakkundu - (அதனால்) துன்பப்பட்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை, Thalarndhum murindhum kidapenai - பலவகையான் சைதில்யங்களை யடைந்து நொந்து கிடக்கிற என்னை
உலகத்து, Ulagathu - இவ் வுலகத்திலே
ஆற்றுவர், Aatruvar - தேறுதல் சொல்லி ஆறச் செய்பவர்
ஆரே, Aare - ஆருண்டு (யாருமில்லை)
ஆரா அமுதம் அனையான் தன், Aara amutham anaiyaan than - எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி பிறவாத
அம்ருதம் போன்ற கண்ணபிரான் உடைய

அமுதம் வாயில், Amutham vaayil - அம்ருதம் சுரக்கிற திரு வாயிலே
ஊறிய, ooriya - ஊறிக் கிடக்கிற
நீர் தான், neer thaan - ரசத்தை யாவது
புலராமே கொணர்ந்து, Pularaame konarndhu - உலராமல் பசையோடு கொண்டு வந்து
பருக்கி, Parukki - அதை நான் பருகும்படி பண்ணி
இளைப்பை நீக்கீரே, ilaippai neekeere - எனது ஆயாசத்தை பரிஹரிக்கப் பாருங்கோள் (என்கிறாள்)