| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 632 | நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 6 | நடை யொன்றில்லா வுலகத்து நந்த கோபன் மகன் என்னும் கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு புடையும் பெயரகில்லேன் நான் போட்கன் மிதித்த வடிப்பாட்டில் பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா யுயிர் என்னுடம்பையே | நடை ஒன்று இல்லா உலகத்து , Nadai ondru illa ulagathu - (ஏற்கனவே) மரியாதைகளெல்லாம் குலைந்து கிடக்கிற இவ் வுலகத்தில் நந்தகோபன் மகன் என்னும் , Nandhagopan magan ennum - ஸ்ரீநந்த கோபர் மகன் என்று ப்ரஸித்தனாய் கொடி ,Kodi - இரக்க மற்றவனாய் கடிய , Kadiya - ஸ்வார்த்த பரனான திருமாலால் , Thirumaalaal - ச்ரிய: பதியாலே (கண்ணனாலே) நான் , Naan - அபலையான நான் குளப்புக்கூறு கொளப்பட்டு , Kulapukkuru kolapattu - மிகவும் துன்பப் படுத்தப் பட்டு புடை பெயரவும் கில்லேன் , Pudai peyaravum kilen - அப்படி இப்படி அசைவதற்கும் அசக்தை யாயிரா நின்றேன் (ஆன பின்பு) போட்கன் , Potkan - சுணை கேடனான அக் கண்ண பிரான் மிதித்த அடிப்பாட்டில் , Midhitha adipaatil - திருவடி பட்டு மிதித்த இடத்திலுண்டான பொடி தான் , Podi thaan - ஸ்ரீபாத தூளியை யாவது கொணர்ந்து , Konarndhu - கொண்டு வந்து போகா உயிர் என் உடம்பை பூசீர்கள் , Poga uyir en udambai pooseergal - வீட்டுப் பிரியாத வுயிரை யுடைய என் உடம்பிலே பூசுங்கள் |