திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 633 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
633நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 7
வெற்றிக் கருளக் கொடியான் தன் மீ மீ தாடா வுலகத்து வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே குற்றமற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு அற்ற குற்றமவை தீர அணைய வமுக்கிக் கட்டீரே
பதவுரை Show / Hide
கருளன் வெற்றி கொடியான் தன் மீது ஆடா உலகத்து , Karulan vetri kodiyaan than meedhu aadaa ulagathu - பெரிய திருவடியை வெற்றிக் கொடியாக வுடைய எம்பெருமானுடைய ஆணையை மீறிச் செல்லக் கடவதல்லாத இவ்வுலகத்தில் (எம்பெருமானுடைய ஆணைக்கு உட்பட்டதான இவ்வுலகத்தில்)
பெற்ற தாய் , Petra thaai - அவனைப் பெற்ற தாயாகிய யசோதையானவள் (தனது புத்திரனை)
வெற்ற வெறிதே , Vetra verithe - ஒருவர்க்கும் பயனின்றியே (பயனில்லை யென்கிற மாத்திரமேயோ?)
வேம்பு ஆகவே , Vembu aagave - வேப்பங்காய் போல் வைக்கும் படியாகவே
வளர்த்தான் , Valarthaan - வளர்த்து வாரா நின்றான்
குற்றம் அற்ற , Kutram atra - (அவனைத் தவிர்த்து வேறொருவன் விரும்புகையாகிற) குற்றம் இல்லாத
முலை தன்னை , Mulai thannai - (என்னுடைய) ஸ்தநங்களை
குமரன் , Kumaran - யௌவனத்தோடு தோள் தீண்டியான அப் பெருமானுடைய
கோலம் பணைதோளோடு , Kolam panaitholodu - அழகியதாயும் கற்பகக்கிளை போன்ற தாயுமுள்ள திருத் தோள்களோடே
அற்ற குற்றம் அவை தீர , Atra kutram avai theera - (என்னைக் கை விட்டு) அவற்றுக்கே அற்றுத் தீர்ந்த குற்றம் தீரும்படி
அணைய அமுக்கி கட்டீர் , Anaiya amuki kateer - அமுக்கி யணைத்துக் கட்டி விடுங்கள்