திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 634 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
634நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 8
உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்த நனைக் கண்டக்கால் கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே
பதவுரை Show / Hide
உள்ளே உருகி நைவேனை, ulle Urugi Naivenai - உள்ளுக்குள்ளேயே கரைந்து நைந்து போகிற என்னைப் பற்றி
உளளோ இலளோ என்னாத, Ullalo Ilalo Enadha - “இருக்கிறாளா? செத்தாளா?“ என்றும் கேளாதவனாய்
கொள்ளை கொள்ளி, Kollai Kolli - என் ஸர்வஸ்வத்தையும் அபஹரித்துக் கொண்டவனாய்
குறும்பனை, Kurumbanai - (பெண்கள் திறத்திலே) பொல்லாங்கு செய்யுமவனான
கோவர்த்தனனை, Govarthananai - கண்ணபிரானை
கண்டக்கால், Kandakkaal - (ஒருகால்) நான் காணப் பெற்றேனாகில்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத, Kollum Payan Ondru Illadha - (ஆட்டுக் கழுத்தல் முலை போலே) உபயோக மற்றதான
கொங்கை தன்னை, Kongai Thannai - (என்னுடைய இந்த) முலையை
கிழங்கோடும் அள்ளி பறித்திட்டு, Kizhangodum Alli Parithitu - வேர் முதலோடே பற்றிப் பிடுங்கி
அவன் மார்வில் எறிந்து, Avan Maarvil Erindhu - அந்த க்ருஷ்ணனுடைய மார்பிலே எறிந்து விட்டு
என் அழலை, En Azhalai - என் துக்கத்தை
தீர்வேன், theerven - போக்கிக் கொள்ளப் பெறுவேன்