| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 635 | நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 9 | கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என் செம்மையுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் ஒரு நான்று மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே | கொம்மை முலைகள், Kommai Mulaigal - (எனது) கிளர்ந்த பருத்த முலைகளினுடைய இடர் தீர கோவிந்தற்கு ஓர குற்றவேல், Idar Theera Govindharku Ora Kutravel - குமைச்சல் தீரும்படி கண்ணபிரானுக்கு அந்தரங்கமான கைங்கரியத்தை செம்மை உடைய திருமார்விலே, Semmai Udaiya Thirumaarvile - (அன்பர்கள் அணைவதற்கென்றே ஏற்பட்டிருக்கையாகிற) செவ்வையை யுடைத்தான் (தனது) திருமார்பிலே சேர்த்தானேலும், Serthaanelum - (என்னை அவன்) சேர்த்துக் கொண்டானாகில் நன்று, Nandru - நல்லது ஒரு நான்று, Oru Naandru - ஒரு நாள் இம்மைப் பிறவி செய்யாதே இனி போய், Immai Piravi Seyaadhe Ini Poi - இந்த ஜன்மத்திலே செய்யப் பெறாமல் இந்தப் பிறவி கழிந்த பின்பு வேறொரு தேச விசேஷத்திலே போய் செய்யும், Seiyum - செய்யக் கூடியதான தவந்தான் ஏன்?, Thavandhaan Yen? - தபஸ்ஸு ஏதுக்கு? முகம் நோக்கி, Mugam Nokki - என் முகத்தைப் பார்த்து மெய்ம்மை சொல்லி, Meimmai Solli - மெய்யே சொல்லி விடை தான் தருமேல், Vidai Thaan Tharumel - “நீ எனக்கு வேண்டாம்போ“ எனறு தள்ளி விட்டமை தோன்ற விடை கொடுப்பானாகில் மிக நன்று, Miga Nandru - அது உத்தமோத்தமம் |