Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 636 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
636நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 10
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே
வில்லை துலைத்த, Villai Thulaitha - வில்லைத் தோற்கடித்த
புருவத்தாள், Puruvathaal - புருவங்களை யுடையளாய்
வில்லி புதுவை நகர் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை, Villi Puthuvai nagar Nambi Vittu Chithan Viyan Kodhai - ஸ்ரீவில்லி புத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய மகளாய் ஆச்சர்ய குணசாலிநியான ஆண்டாள்
அல்லல் விளைத்த பெருமானை, Allal Vilaitha Perumaanai - (திருவாய்ப் பாடி முழுதும்) தீங்கு விளைத்து அதனால் பெருமை பெற்றவனும்
ஆயர் பாடிக்கு அணி விளக்கை, Aayar Paadikku Ani Vilakkai - திருவாய்ப் பாடிக்கு மங்கள தீபம் போன்று ப்ரகாசகனுமான கண்ண பிரானை
வேட்கை உற்று, Vetkai Utru - ஆசைப் பட்டு
மிக விரும்பும் சொல்லை, Miga Virumbum Sollai - மிக்க அபிநிவேசம் தோற்ற அருளிச் செய்த இப் பாசுரங்களை
துதிக்க வல்லார்கள், Thuthika Vallargal - புகழ்ந்து ஓத வல்லவர்கள்
துன்பம் கடலுள், Thunbam Kadalul - ஸம்ஸார ஸமுத்ரத்தில்
துவளார், Thuvalaar - துவண்டு நோவு படமாட்டார்கள்