திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 637 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
637நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 1
பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய் இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
பதவுரை Show / Hide
ஓர் கார் ஏறு, Oor Kaar eru - (கண்ண பிரானென்கிற) கறுத்த காளை யொன்று
பட்டி மேய்ந்து, Patti Meindhu - காவலில்லாமல் யதேச்சமாய்த் திரிந்து கொண்டும்
பல தேவற்கு, Pala Dhevarku - பல ராமனுக்கு
ஓர் கீழ் கன்று ஆய், Oor Keezh Kanru Aay - ஒப்பற்ற தம்பியாய்
இட்டீறிட்டு, Itteeritu - ஸந்தோஷத்துக்குப் போக்கு வீடாகப் பலவகையான கோலா ஹலங்களைப் பண்ணி
விளையாடி, Vilaiyaadi - விளையாடிக் கொண்டு
இங்கே போத, Inge Podha - இப்படி வர
கண்டீரே, Kandire - பார்த்தீர்களோ?
இட்டம் ஆன, Ittam Aana - (தனக்கு) இஷ்டமான
பசுக்களை, Pasukalai - பசுக்களை
இனிது, Inidhu - த்ருப்தியாக
மறித்து, Marithu - மடக்கி மேயத்து
நீர் ஊட்டி, Neer Ootti - தண்ணீர் குடிப்பித்து
விட்டுக் கொண்டு, Vittu Kondu - (இப்படியாக) அவற்றை மேய விட்டுக் கொண்டு
விளையாட, Vilaiyaada - (அப் பெருமான்) விளையாட நிற்க
விருந்தாவனத்தே, Virundhavanathe - ப்ருந்தாவனத்திலே
கண்டோம், Kandom - ஸேவித்தோம்