திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 638 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 2 | அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே | பதவுரை Show / Hideஅனுங்க, Anunga - நான் வருந்தும்படியாக என்னை பிரிவு செய்து, Ennai Pirivu Seydhu - என்னைப் பிரிய விட்டுப் போய் ஆயர்பாடி, Aayarpaadi - திருவாய்ப் பாடியை கவர்ந்து, Kavarnthu - ஆக்ரமித்து உண்ணும், Unnum - அநுபவிக்கின்றவனாய் குணுங்கு நாளி, Kunungu Naali - வெண்ணெய் மொச்ச நாள்ளம் நாறுமவனாய் குட்டேற்றை, Kutetrai - இளைய ரிஷபம் போன்றவனான கோவர்த்தனனை, Govardhananai - கண்ண பிரானை கண்டீரே, Kandire - கண்டீரே மின் மேகம், Min Megam - மின்னலும் மேகமும் கலந்தால் போல், Kalanthaal Pol - ஒன்றோடொன்று சேர்ந்தாற்போலே வனமாலை மினுங்க நின்று, Vanamaalai Minunga Nindru - (கறுத்த திருமேனியிலே மின்னல் போன்ற) வனமாலை திகழப் பெற்று கணங்களோடு, Kanangalodu - (தோழன்மாருடைய) கூட்டங்களோடு கூட விளையாட, Vilaiyaada - விளையாடா நிற்க விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம் |