திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 639 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
639நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 3
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே
பதவுரை Show / Hide
மால் ஆய் பிறந்த நம்பியை, Maal aay Pirandha Nambiyai - பெண்கள் பக்கலுண்டான வ்யாமோஹமே ஒரு வடிவாய்க் கொண்டு பிறந்த தென்னலாம்படியான பெருமானாய்
மாலே செய்யும் மணாளனை, Maale Seiyum Manalanai - வ்யாமோஹத்தையே செய்கிற மணவாளப் பிள்ளையாய்
ஏலா பொய்கள் உரைப்பானை, Eala poikal uraipanai - பொருந்தாத பொய்களைச் சொல்லுமவனான கண்ண பிரானை
இங்கே போதக் கண்டீரே?, Inge Podha Kandire? - இங்கே போதக் கண்டீரே?
மேலால், Melaal - மேலே
பரந்த, Parandha - பரவின
வெயில், veyil - வெய்யிலை
காப்பான், kapan - (திருமேனியில் படாமல்) தடுப்பதற்காக
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின்கீழ் வருவானை, Vinathai Siruvan Siragu Enum Melapinkeezh Varuvaanai - கருடனுடைய சிறகாகிற விதானத்தின் கீழ் எழுந்தருளா நின்ற அப் பெருமானை
விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம்