திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 640 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
640நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 4
காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல் வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
பதவுரை Show / Hide
கார், Kaar - காளமேகத்திலே
தண், Than - குளிர்ந்த
கமலம், Kamalam - தாமரை பூத்தாற் போன்றுள்ள
கண் என்றும், Kan Endrum - திருக் கண்கள் என்கிற
நெடு கயிறு, Nedu Kayiru - பெரிய பாசத்திலே
என்னை படுத்தி, Ennai Paduthi - என்னை அசப்படுத்தி
ஈர்த்துக் கொண்டு, Eerthu Kondu - (தான் போமிடமெங்கும் என்னெஞ்சையும் கூடவே) இழுத்துக் கொண்டு போய்
விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே?, Vilaiyaadum Eesan Thannai Kandire? - விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின் குப்பாயம், Portha Muthin Kuppayam - போர்வையாகப் போர்த்த முத்துச் சட்டையை யுடையதாய்
புகர், Pugar - தேஜஸ்ஸை யுடையதாய்
மால், Maal - பெரிதான
யானை கன்று போல், Yaanai Kanru Pol - யானைக் குட்டி போலே
வேர்த்து நின்று விளையாட, Verthu Nindru Vilaiyaada - வேர்வையுற்று நின்று விளையாட
விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம்