திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 641 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
641நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 5
மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரோ பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல் வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
பதவுரை Show / Hide
மாதவன், Madhavan - ஸ்ரீய: பதியாய்
என் மணியினை, En Maniyinai - எனக்கு நீல ரத்னம் போலே பரம போக்யனாய்
வலையில் பிழைத்த பன்றி போல், Valaiyil Pizhaitha Panri Pol - வலையில் நின்றும் தப்பிப் பிழைதத்தொரு பன்றி போலே (செருக்குற்று)
ஏதும் ஒன்றும், Edhum Ondrum - (தன் பக்கலுள்ள) யாதொன்றையும்
கொள தாரா, Kola Thaaraa - பிறர் கொள்ளும்படி தாராதவனான (ஒருவர் கைக்கும் எட்டாதவனான)
ஈசன் தன்னை கண்டீரே?, Eesan Thannai Kandire? - ஈசன் தன்னை கண்டீரே?
பீதகம் ஆடை, Peedhagam Aadai - திருப் பீதாம்பரமாகிற
உடை, Udai - திருப் பரிவட்டமானது
தாழ, Thaazha - தொங்கத் தொங்க விளங்க
பெரு கார் மேகம் கன்று போல், Peru Kaar Megam Kanru Pol - பெருத்துக் கறுத்துதொரு மேகக் குட்டி போலே
வீதி ஆர வருவானை, Veethi Aara Varuvaanai - திரு வீதி நிறைய எழுந்தருளும் பெருமானை
விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம்