| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 642 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 6 | தருமம் அறியா குறும்பனைத் தன கைச் சார்ங்கமதுவே போல் புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல் விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே | தருமம் அறியா, Tharumam Ariyaa - இரக்கமென்பது அறியாதவனாய் குறும்பனை, Kurumbanai - குறும்புகளையே செய்யுமவனாய் தன் கை சார்ங்கம் அதுவே போல், Than Kai Saarngam Athuve Pol - தனது திருக்கையிலுள்ள சார்ங்க வில்லைப் போன்ற புருவ வட்டம், Puruva Vattam - திருப் புருவ வட்டங்களாலே அழகிய, Azhagiya - அழகு பெற்றவனாய் பொருத்தம் இலியை, Porutham Iliyai - (அவ்விழகை அன்பர்கட்டு அநுபவிக்கக் கொடுத்து) பொருந்தி வாழப் பெறாதவனான பெருமானை கண்டீரே?, kandeere? - கண்டீரே? உருது கரிது ஆய், Uruthu Karidhu Aay - திருமேனியில் கருமை பெற்றும் முகம் செய்து ஆய், Mukam Seidhu Aay - திரு முகத்தில் செம்மை பெற்றும் இருப்பதாலே உதயம் பருப்பதத்தின் மேல் விரியும் கதிர் போல்வானை, Udhayam Parupathathin Mel Viriyum Kathir Polvaanai - உதய பர்வதத்தின் மேலே விரிகின்ற சூரியன் போல் விளங்கும் அப்பெருமானை விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே |